Income Tax in BUDGET 2024-25 : வரி விதிப்பை எளிமைப்படுத்தல் எனும் ஏமாற்று வேலை!

"வரி விதிப்பை எளிமைப்படுத்துவதே எங்களது முயற்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நாங்கள் Corporate  மற்றும் தனிநபர் வருமான வரிக்கு exemptions & deductions இல்லாமல் எளிமைப்படுத்தப்பட்ட வரி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவது உட்பட  பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இது வரி செலுத்துவோரால் பாராட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் வரியில் 58% 2022-23 நிதியாண்டில் எளிமைப்படுத்தப்பட்ட வரி விதிப்பிலிருந்து வந்தது. இதேபோல் இதுவரை கிடைத்த தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் New Regime முறையைப் பயன்படுத்தியுள்ளனர்." இது இந்திய நிதியமைச்சரின் 2024-25க்கான நிதிநிலை அறிக்கை தொடர்பான உரையின் சாரம்.

அதென்ன வரி விதிப்பை எளிமைப்படுத்தல்? மெய்யாகவே அதைப் பாராட்டுமளவிற்கு வரி செலுத்துவோர் பயனடைந்துள்ளனரா? வருமான வரியில் 2024-25ன் மாற்றங்கள் என்னென்ன?

நாட்டிற்காக மற்ற எவரையும்விட, வருமான வரியாக மட்டுமே தனது ஒரு மாத ஊதியத்தை ஆண்டுதோறும் செலுத்திவரும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தனியார் நிறுவன ஊழியர்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். வாருங்கள் பார்ப்போம்.

தனிநபர் வருமான வரிக்கென முதலில் ஒரேயொரு வரிவிதிப்பு (Old Regime) முறையே இருந்தது. ஆனால், வரி விதிப்பை எளிமைப்படுத்துகிறேன் என்ற பெயரில் New Regime முறை கொண்டுவரப்பட்டது.

இதன்படி,

1. வீட்டுக்கடனிற்கான வட்டிக்கு வரி விலக்கு இல்லை.

2. தொழில் வரிக்கு வரி விலக்கு இல்லை.

3. மழைவாழிடம் & குளிர்ப் பிரதேச படிகள் உட்பட வேலையின் தன்மைக்காக வழங்கப்படும் அனைத்துவித படிகளுக்கும் வரி விலக்கு இல்லை.

4. ஆயுள் காப்பீடு, சேமிப்புகள், முதலீடுகள், ஓய்வூதியத் திட்ட முதலீடுகள் என எதற்குமே வரி விலக்கு இல்லை.

5. மாற்றுத்திறனாளிகளுக்கோ, மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பதற்கோ வரி விலக்கு இல்லை.

6. மருத்துவக் காப்பீடுகளுக்கோ, மூத்த குடிமக்களின் மருத்துவச் சிகிச்சைச் செலவினங்களுக்கோ வரி விலக்கு இல்லை.

7. பிள்ளைகளின் கல்விக் கட்டணத்திற்கோ, கல்விக் கடனுக்கான வட்டித் தொகைக்கோ வரி விலக்கு இல்லை.

8. அரசுக்கோ, அறிவியல் நிறுவனங்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ & அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கோ அளிக்கும் நிதியளிப்புகளுக்கு (Donation) வரி விலக்கு இல்லை.

9. மின்சார வாகனக் கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு இல்லை.

மொத்தத்தில் ஒருவர் தான் பெறும் ஊதியத்திற்கு 100% வருமானவரி செலுத்தியாக வேண்டும். அவர் வீடுகட்டுவதைப் பற்றியோ, பிள்ளைகளைப் படிக்க வைப்பது பற்றியோ, உயிருக்குக் காப்பீடு செய்வது பற்றியோ, மூத்தோர் & மாற்றுத்திறனாளிகளைப் பராமரிப்பது பற்றியோ, இயற்கைப் பேரிடரின் போது அரசுக்கு நிதியுதவி செய்வது பற்றியோ எந்தவித அக்கறையும் பொறுப்புணர்வும் அரசிற்கு இல்லை என்கிறது இந்த New Regime.

அடிப்படையில் மேலே கூறப்பட்ட வரி விலக்குப் பிரிவுகள் அனைத்துமே 100% தனிமனித சேமிப்பையும், பாதுகாப்பையும், கல்வியையும், அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அவற்றின் தேவை கருதியே கொண்டுவரப்பட்டன. மேலும், இதனால் வரி விலக்கு கிடைக்கும் என்பதற்காகவே தனிநபர் சேமிப்பும், LIC காப்பீடுகளும், வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுவதுமான நாட்டின் வளர்ச்சிக்கான மறைமுக முதலீடுகள் கோடிகோடியாகப் பெருகியது. இறுதியாக வந்த உலகப் பொருளாதார பெருமந்தத்தில் இந்தியா மட்டும் பேரிழப்பைச் சந்திக்காது இருந்ததற்கு இந்தியர்களின் தனிமனத சேமிப்புகளே காரணம் என்கிறது உலக பொருளாதார நிலை ஆய்வறிக்கை.

ஆனால், வரி விதிப்பை எளிமையாக்குகிறேன் என்ற பெயரில் NEW REGIME மூலம் தனிநபருக்கும், அவரது குடும்ப நல்வாழ்விற்கும், LIC உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அதன் மூலமாக நாட்டிற்கும் 100% பாதிப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆம். இனி வரும் காலங்களில் தனிநபர் சேமிப்பு, LIC உள்ளிட்ட ஆயுள் காப்பீடு உட்பட முன்னர் வரிவிலக்கு பெற்ற அனைத்தின் மீதான ஈர்ப்பும் மாத ஊதியம் பெருவோரிடையே முழுமையாகக் குறைந்துவிடும். இதன் தாக்கம் 100% நாட்டின் பொருளாதாரத்தில் எதிரொலிக்கும்.

அப்படியெல்லாம் இல்லை NEW REGIMEல் தான் எனக்கு வரி குறைவாக வருகிறது என்று நினைப்போர் ஒன்றை மட்டும் நினைவில் ஏற்றிக்கொள்ளுங்கள், NEW REGIMEல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வரிவிதிப்பில் சிறிசிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன; ஆனால் OLD REGIMEல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வரிவிதிப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவே இல்லை. நல்லா ஓடுற Bikeஐ OFF பண்ணீட்டு பார்த்தா Bicycle வேகமா ஓடுறமாதிதான் தெரியும்.

மொத்தத்தில் வரிவிதிப்பை எளிமையாக்குகிறேன் என்ற பெயரில் வரி செலுத்துவோரும் - மற்றவர்களும் - ஒட்டுமொத்த நாடும் ஏமாற்றப்பட்டுள்ளது. இங்கு நான் குறிப்பிட்டுள்ள பாதிப்புகள் குறைவானவையே. முழுமையான  இதன் விபரீத விளைவுகளை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நம் கண்களால் காண்போம். இனி இப்பதிவில் 2024-25 Budgetன் Income Tax மாற்றங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருமான வரி தொடர்பாக New Regime முறைக்கு மட்டும் வரி சதவீதம் மற்றும் Standard Deductionல் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி,

நிகர வருமானம் ரூ.3,00,000 வரை வரி இல்லை.
3,00,001 - 7,00,000     -   5%
7,00,001 - 10,00,000   - 10%
10,00,001 - 12,00,000 - 15%
12,00,001 - 15,00,000 - 20%
15,00,000க்கு மேல்    - 30%
என்று வரி விதிக்கப்படும். அதாவது 6,00,001 - 10,00,000 வரையிலான 4,00,000 ரூபாய்க்கான வரியானது கடந்த ஆண்டைவிட 5% குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, Standard Deduction 25,000 அதிகரித்து 75,000ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால், 7,50,000-க்குப் பதில் வரும் ஆண்டில் ரூ.7,75,000 வரை ஆண்டு மொத்த வருமானம் (Gross Income) உள்ளோருக்கு வருமானவரி இல்லை. அதாவது,

Gross Income.          = 7,75,000 -
Standard Deduction=    75,000
                                        --------
Net Taxable Income= 7,00,000
                                        --------
என்று கழிவிற்குப் பிந்தைய நிகர வருமானம் ரூ.7,00,000 வரை வந்தால் வரி இல்லை. 

ஆனால் இதை Nil Tax என்று நேரடியாகக் குறிப்பிடவில்லை. மாறாக ரூ.7,00,000 வரையிலான நிகரத் தொகைக்கு U/S 87Aல் special Rebate அளித்து வரி சுழியமாக்கப்படும். இது வழக்கமான நடைமுறையே.

அதாவது, ரூ.7,00,000க்கான தற்போதைய வரி,

Upto 3,00,000           = 0
3,00,001 - 7,00,000 = 4,00,000 x 5%
                                      = ரூ.20,000

இந்த ரூ.20,000 Rebateஆக அனுமதிக்கப்பட்டு கழிக்கப்பட, வரி சுழியமாகும். இது நிகர வருமானம் ரூ.7,00,000/- வரை இருந்தால் மட்டுமே பொருந்தும்.

அதைவிடக் கூடுதலானால் முதல் 3 இலட்சத்தைத் தவிர்த்து மற்ற தொகை முழுமைக்கும் வரி விதிப்பு % படி வரி கட்டியாக வேண்டும். உதாரணமாக, ரூ.7,00,010க்கான வரி,

Upto 3,00,000           = 0
3,00,001 - 7,00,000 = 4,00,000 x 5%
7,00,001 - 7,00,010 = 10 × 10%
                                      = 0 + 20,000 +1
                                      = ரூ.20,001

என்னடா இது டேக்ஸ் மார்ஜினைவிட 10 ரூவா வருமானம் கூடுனதுக்கு 20,000 வரியா? என்று ஷாக் ஆகாதீங்க.

இது தான் வழக்கமான கணக்கீடு என்றாலும், இந்த அதிர்ச்சியைக் குறைக்க Marginal Relief என்ற முறை கடந்த ஆண்டு முதலே New Regimeல் மட்டும் நடைமுறையில் உள்ளது. U/S 87Aல் இந்த Marginal Relief  கணக்கீடு மேற்கொள்ளப்படும். நிகர வருமானத்தைப் பொறுத்து ரூ.19,991 முதல் ரூ.2 வரை Rebate அளித்து வரி கழித்துக் கணக்கிடப்படும்.

இதனால், நடப்பு ஆண்டிற்கு 7,00,000 முதல் 7,22,220 வரையிலான நிகர வருமானத்திற்கு ரூ.7 இலட்சத்தைவிடக் கூடுதலாக வரும் வருமானத்தை மட்டும் வரியாகச் செலுத்தினால் போதுமானது. ஆதாவது, 7,00,010க்கு வரி = ரூ.10 என்று தொடங்கி 7,22,220க்கு வரி = ரூ.22,220 என்பது வரை வருமான வரியாக வரும். 

7,22,220க்கும் மேலான நிகர வருமானத்திற்கு Marginal Relief தேவைப்படாது. ஏனென்றால் அதற்கு மேல். . . . . ஷாக் ஆக்காத வழக்கமான வரிக் கணக்கீட்டுத் தொகையே வந்துவிடும். 

இவ்வளவுதான் தனிநபர் வருமான வரி தொடர்பான நடப்பு ஆண்டின் தற்போதைய மாற்றங்கள். அடுத்த கூட்டத்தொடரில் எழுப்பப்படும் கேள்விகளையும் அதற்கு அளிக்கப்படும் மதிப்பையும் பொறுத்து மாற்றங்கள் வரலாம். வராமலும் போகலாம்.

இறுதியாக, இந்த 5% வரிக் குறைப்பு, Standard Deduction 75,000 மற்றும் Marginal Relief என்பதையெல்லாம் பார்த்து NEW REGIME தான் Best Tax Method என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணத்தை நம் மனதுள் வளர்த்து இதுதான் எளிமையானது என்று நம்மை நம்ப வைக்கவே மேற்கண்ட மாற்றம் எனும் ஆசையைத் தூண்டிவிட்டுள்ளனர்.

இதன் முக்கிய நோக்கமே, நாமும் நாடும் பயன்படும் OLD REGIMEஐ முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே. 5 ஆண்டுகளுக்கும் மேலாக OLD REGIMEன் வரிவிதிப்பில் பெரிய அளவிலான எந்தவித மாற்றமும் செய்யாது, அதை நாமே தவிர்க்கும்படியான சூழலை திட்டமிட்டே உருவாக்கியுள்ளனர்.

இனி இதில் மாற்றம் நிகழுமா என்பது தெரியாது. எனினும், "வரியை எளிமைப்படுத்தினோம்!" எனும் பேரில் நாமும் நாடும் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதைத் தெளிவிக்கவே இப்பதிவு. பெருமொத்தத் தெளிவால் எதிர்காலத்தில் மாற்றம் நிகழ்ந்தால் மகிழ்ச்சியே!

_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

Income Tax Calculator 2025 (Proposal Version)

இந்திய அரசின் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களின் 23.07.2024 தேதியிட்ட நிதிநிலை அறிக்கை உரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்காக இக்கணிப்பான் தயார்செய்யப்பட்டுள்ளது.

IFHRMSல் உள்ளிட தங்களுக்கு எந்த வரிவிதிப்பு முறை (OLD REGIME / NEW REGIME) பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதி செய்ய, 2024-25ஆம்  நிதியாண்டிற்கான தங்களது வருமான வரியைக் கணக்கிட்டு சரியான வரிவிதிப்பு முறையை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள இந்த “அறிவுச்சாளரம் Income Tax Calculator 2025 (Proposal Version)” பதிப்பு உதவியாக இருக்கும்.

இப்பதிப்பு அறிவுச்சாளரத்தின் கடந்த வெளியீடுகளைப் போன்றதே. இதில் மார்ச் 2024 மாதத்திற்கான ஊதிய விபரங்களை உள்ளிட வேண்டும்.

ஜனவரி, பிப்ரவரி & மார்ச் மாதங்களுக்கான 4% DA நிலுவை மற்றும் ஜுலை, ஆகஸ்ட் & செப்டம்பர் மாதங்களுக்கான 3% DA நிலுவை தானாகக் கணக்கிட்டுக் கொள்ளும்.

தற்போதுவரை IFHRMSல் பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரித் தவணையை தேவைப்பட்டால் உள்ளிடவும். இல்லையேல் Old Back / New Back Sheetகளில் உள்ள Pay Drawn Detailsல் 12 மாதங்களுக்கான வருமான வரித் தவணை தானாகவே கணக்கிடப்பட்டுக் காட்டும்.

வருமான வரித்துறை அறிவிப்பின்படி CPSல் உள்ளோருக்கு 80CCD(1B) கழிவு சேர்க்கப்படவில்லை.

தனியாக NPSல் முதலீடு செய்துள்ளோர் அதற்கான தொகையை 'Fill White Cell' sheetன் 80CCD(1B) cellல் உள்ளிடவும்.

நினைவில் கொள்க. இது 100% மாற்றங்களுக்குரிய தோராயக் கணக்கீடு மட்டுமே. IFHRMSன் முழுமையான வருமான வரிக்கணக்கீடு பயன்பாட்டிற்கு வந்த பின்னர், தேவைப்படின் அதனடிப்படையில் புதிய பதிப்பு வெளியிடப்படும்.

திரையில் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

IT Calculator 2024 (Union Govt. Employee Version)

நாட்டின் நிதி வருவாயில் 100% உறுதியான நேரடி வரி வருவாயைத் தமது மாத ஊதியத்தில் 12-ல் ஒரு பங்கென வழங்கி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களில் ஒன்றிய அரசின் கீழ் பணியாற்றுவோருக்கு வணக்கம்.

ஆண்டுதோறும் தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிமையாக ஒரே நேரத்தில் பழைய & புதிய வரிக்கணக்கீட்டு (Old Regime, New Regime) முறைகளில் நீங்களே தயார் செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
திரையில் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
இது ஒன்றிய அரசுப் பணியாளர்களான அனைத்து வயதினருக்கும் (Employee, Senior Citizen & Super Senior Citizen) பொதுவான கணிப்பான். பிறந்த தேதியைப் பொறுத்து உங்களுக்கான வரிக் கணக்கீடு மாறுபடும். 60 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் தங்களது பிறந்த தேதியை மறவாது குறிப்பிடவும்.
 
ஒன்றிய அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை 2023 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்களை அளித்தால் போதும். ஒன்றிய அரசின் 7-வது ஊதியக்குழுவின் Pay Matrix படி 12 மாத Pay Drawn Particulars தானாகவே நிரப்பப்பட்டுவிடும். இதில் திருத்தம் தேவைப்படின் உரிய Sheet-ல் (Old Back / New Back) சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
 
DA, NPS (10%), வருமான வரிக்கான 4% Cess உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிடப்படும்.

NPS பிடித்தத்திற்கு Arrear செலுத்துதல், வேறு ஏதேனும் Arrear அதற்கான Tax, Bonus, Housing Loan உள்ளிட்டவற்றிற்கு அதற்குரிய மஞ்சள் கட்டங்களில் தனியே உள்ளிட வேண்டும்
 
ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படைத் தகவல்களுடன் மார்ச் 2023 ஓய்வூதிய விபரங்களை அளித்தால் போதுமானது. மேற்கொண்டு Pay Drawn Particulars-ல் திருத்தம் தேவையெனில், Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாகத் திருத்தி தங்களுக்கான வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.
 
 CPS / NPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் வரை விலக்குப் பெறும் வகையில், 80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தம் தானியங்கி முறையில் பிரித்துக் கொள்ளும்.

HRA exemption, வருட வீட்டு வாடகையாக ரூ.1,00,000/-ற்கும் மேல் கழித்தல் & மொத்த வருமான வரியையும் Rounded 10-ஆகக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றிற்கும் தனித்தனியே Options கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

மலைப்படி உள்ளிட்ட Compensatory Allowances / மாற்றுத்திறனாளிக்கான Conveyance Allowances உள்ளிட்டவற்றைக் கழிக்க விரும்புவோர் Others-ல் நிரப்பி அதன் மொத்தத்தை உரிய மஞ்சள் கட்டத்தில் தனியே காண்பித்து கழித்துக் கொள்ளலாம்.

GEIS தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிவு காட்ட விரும்புவோர் அத்தொகையை அதற்குரிய மஞ்சள் கட்டத்தில் தனியே கொடுக்கவும்.

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாத LIC, NSC உள்ளிட்ட சேமிப்புகளை அதன் மொத்தத் தொகையை காப்பீட்டு எண்ணுடன் அதற்குரிய கட்டத்தில் நிரப்பவும்.

இறுதியாக, நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு பழைய & புதிய கணக்கீட்டு முறைகளின் படியான வருமானவரி தனித்தனியே கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின் இறுதியில் தோன்றும்.

அதை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையான Sheet-களை (Old Front & Old Back / New Front & New Back) மட்டும் Print செய்து கொள்ளலாம்.
 
இதில் கூடுதலாக, மாதிரி Form-16 படிவமும் தனியே தரப்பட்டுள்ளது. அசல் Form-16 படிவம் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலர் (Pay Drawing Officer) வாயிலாக IT துறையிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும்.
 
நாம் பெற்றதை
ஞாலம் பயனுற
யாவருக்கும் பகிர்வோம்!
- செல்வ.ரஞ்சித் குமார்

யார் - எதற்காக IT RETUN செய்ய வேண்டும்?

PAN எண் வைத்துள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வருமான வரித்துறை நிர்ணயிக்கும் காலக்கெடுவிற்குள் தங்களது வருமானம் & வரி விபரங்களைத் தனிப்பட்ட முறையில் வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்தாக வேண்டும். இதற்கு IT RETURN என்று பெயர்.

2022-23 நிதியாண்டில், வருமான வரி செலுத்தியிருந்தாலும் - செலுத்தாவிட்டாலும் தங்களது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்க (IT RETUN செய்ய) 31.07.2023 இறுதி நாளாகும்.

அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறினால் ரூ.5,000/- அபராதம் விதிக்கப்படும். இது மற்றவர்களுக்கு எப்படியோ அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை கட்டாயமாக நேர் செய்யப்பட்டுவிடும்.

--- --- --- 

நான் இதுவரை  IT RETURN செய்ததேயில்லையே. . . எனக்கென்ன அபராதமா விதித்தார்கள்? என எண்ணலாம். . . .

தொழில்நுட்ப வசதி, PAN, ஆதார் இணைப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்துவிட்டதால் வருங்காலங்களில் கண்காணிப்புகள் தீவிரமாகும். அபராதம் தானாக வந்து சேரும்.

--- --- ----

எனக்குத்தான்  FORM-16 வந்திருச்சே நான் ஏன் IT RETURN செய்ய வேண்டும்? என்று தோன்றலாம். . .

FORM-16 என்பது A & B என இரு பிரிவாக இருக்கும்.

FORM-16 A என்பது ஊதியம் வழங்கும் அலுவலர் தனது TAN எண்ணில் ஊழியரிடம் இருந்து பிடித்தம் செய்து வைத்த வருமான வரித் தொகையை, வருமான வரித்துறையிடம் அவரவர் PAN எண்ணிற்கென பிரித்துச் செலுத்திவிட்டேன் என்பதைத் தெரிவிக்கும் சான்றிதழ் ஆகும்.

FORM-16 B என்பது ஊதியம் வழங்கும் அலுவலரிடம் தாங்கள் பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பித்த வருமான வரிப் படிவத்தில் உள்ள தரவுகளைப் பிரிவு வாரியாக உங்களது PAN எண்ணில் பதிவேற்றியதைக் குறிக்கும் சான்றிதழ் ஆகும்.

எனவே இவையிரண்டுமே ஊதிய அலுவலர் வழங்கும் சான்றிதழ். அவ்வளவே.

--- --- ---

இந்த இரு சான்றிதழ்கள் போதாதா? மீண்டும் எதற்கு IT Return? எனலாம். . . .

FORM 16B-ல் தனிநபரது பணித்தளத்தில் பெற்ற ஊதியம் & பிடித்தம் சார்ந்தவை அலுலரால் மட்டுமே பதிவேற்றப்படுகிறது. அவ்வாறு பதிவேற்றப்பட்டதற்கு சார்ந்த ஊழியர் ஒப்புதல் அளிக்கிறார் என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.

மேலும், இதனுடன் தனிநபரது மற்ற பணப்பரிமாற்றங்களையும் வருமான வரித்துறையின் மென்பொருளானது தங்களது PAN எண் வழி கண்காணித்துக் கொண்டேதான் இருக்கும். நடப்பு ஆண்டில், வங்கிச் சேமிப்புக் கணக்கு & வைப்புநிதி உள்ளிட்டவற்றிற்கு வரவான வட்டியானது அவரவர் PAN எண்ணில் தானாகவே பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கும் தனிநபர் ஒப்புதல் அளிக்கிறாரா என்பதை IT Return மூலமே வருமான வரித்துறை உறுதி செய்து கொள்கிறது.

ஆக, பணி சார்ந்த பணப்பரிமாற்றம் & தனிப்பட்ட பணப்பரிமாற்றங்கள் என்று தனது ஒட்டுமொத்த வருமானம் - சேமிப்பு - செலவு - வரி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தனது சுய நினைவோடே வருமான வரித்துறையிடம் நானே சமர்ப்பிக்கிறேன் என்ற தனிநபரின் உறுதியளிப்பை வருமான வரித்துறையானது IT Return மூலம்தான் உறுதி செய்து கொள்கிறது.

IT Return செய்யவில்லை எனில், உங்களது வருமானத்தை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க மறுக்கிறீர் / மறைக்கிறீர் என்றே பொருள் கொள்ளப்படும். இது தண்டனைக்குரிய பொருளாதாரக் குற்றமாகும்.

எனவே, வருமான வரி கட்டியிருந்தாலும் கட்டாவிட்டாலும், FORM 16 வாங்கியிருந்தாலும் உரிய காலத்தில் நமது வருமானம் & வரி விபரங்களை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க IT Return செய்வோம்.

✍🏼செல்வ.ரஞ்சித் குமார்

(Picture : Stratup Guruz)

INCOME TAX CALCULATOR 2024

நாட்டின் நிதி வருவாயில் 100% உறுதியான நேரடி வரி வருவாயைத் தமது மாத ஊதியத்தில் 12-ல் ஒரு பங்கென வழங்கி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் & தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வணக்கம்.

ஆண்டுதோறும் தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிமையாக ஒரே நேரத்தில் பழைய & புதிய வரிக்கணக்கீட்டு (Old Regime, New Regime) முறைகளில் நீங்களே தயார் செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
திரையில் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
இது அனைத்து வயதினருக்கும் (Employee, Senior Citizen & Super Senior Citizen) பொதுவான கணிப்பான். பிறந்த தேதியைப் பொறுத்து உங்களுக்கான வரிக் கணக்கீடு மாறுபடும். 60 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் தங்களது பிறந்த தேதியை மறவாது குறிப்பிடவும்.
 
தமிழ்நாட்டின் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களைப் பொறுத்தவரை 2023 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்களை அளித்தால் போதும். தமிழ்நாடு அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் Pay Matrix படி 12 மாத Pay Drawn Particulars தானாகவே நிரப்பப்பட்டுவிடும். இதில் திருத்தம் தேவைப்படின் உரிய Sheet-ல் (Old Back / New Back) சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
 
DA, CPS (10%), வருமான வரிக்கான 4% Cess உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிடப்படும்.

CPS பிடித்தத்திற்கு Arrear செலுத்துதல், வேறு ஏதேனும் Arrear அதற்கான Tax, பொங்கல் Bonus, Housing Loan உள்ளிட்டவற்றிற்கு அதற்குரிய மஞ்சள் கட்டங்களில் தனியே உள்ளிட வேண்டும்
 
தனியார் நிறுவன ஊழியர்கள் / மற்ற மாநில & ஒன்றிய அரசு ஊழியர்கள் தங்களுக்கான 12 மாத Pay Drawn Particulars-ஐ Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாக அளித்து வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.
 
ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படைத் தகவல்களுடன் மார்ச் 2023 ஓய்வூதிய விபரங்களை அளித்தால் போதுமானது. மேற்கொண்டு Pay Drawn Particulars-ல் திருத்தம் தேவையெனில், Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாகத் திருத்தி தங்களுக்கான வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.
 
 CPS / NPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் வரை விலக்குப் பெறும் வகையில், 80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தம் தானியங்கி முறையில் பிரித்துக் கொள்ளும்.

HRA exemption, வருட வீட்டு வாடகையாக ரூ.1,00,000/-ற்கும் மேல் கழித்தல் & மொத்த வருமான வரியையும் Rounded 10-ஆகக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றிற்கும் தனித்தனியே Options கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

மலைப்படி உள்ளிட்ட Compensatory Allowances / மாற்றுத்திறனாளிக்கான Conveyance Allowances உள்ளிட்டவற்றைக் கழிக்க விரும்புவோர் Others-ல் நிரப்பி அதன் மொத்தத்தை உரிய மஞ்சள் கட்டத்தில் தனியே காண்பித்து கழித்துக் கொள்ளலாம்.

NHIS / HF தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிவு காட்ட விரும்புவோர் அத்தொகையை அதற்குரிய மஞ்சள் கட்டத்தில் தனியே கொடுக்கவும்.

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாத LIC, NSC உள்ளிட்ட சேமிப்புகளை அதன் மொத்தத் தொகையை காப்பீட்டு எண்ணுடன் அதற்குரிய கட்டத்தில் நிரப்பவும்.

இறுதியாக, நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு பழைய & புதிய கணக்கீட்டு முறைகளின் படியான வருமானவரி தனித்தனியே கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின் இறுதியில் தோன்றும்.

அதை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையான Sheet-களை (Old Front & Old Back / New Front & New Back) மட்டும் Print செய்து கொள்ளலாம்.
 
இதில் கூடுதலாக, மாதிரி Form-16 படிவமும் தனியே தரப்பட்டுள்ளது. அசல் Form-16 படிவம் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலர் (Pay Drawing Officer) வாயிலாக IT துறையிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும்.
 
நாம் பெற்றதை
ஞாலம் பயனுற
யாவருக்கும் பகிர்வோம்!
- செல்வ.ரஞ்சித் குமார்
 
இணைப்பு 

வீட்டு வாடகைப்படி அட்டவணை (G.O.Ms.No.305, Dated 13th October 2017)

வருமானவாிக் கணிப்பான் 2023 (Individuals inc. Senior & Super Senior Citizens)

நாட்டின் நிதி வருவாயில் 100% உறுதியான நேரடி வரி வருவாயைத் தமது மாத ஊதியத்தில் 1/12 பங்கென வழங்கி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் & தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வணக்கம்.

ஆண்டுதோறும் தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிய முறையில் நீங்களே தயார் செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்து பயன்படுத்திக் கொள்ள M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
 நடப்பு நிதி ஆண்டிலும் வருமான வரி கணக்கினை Old Regime, New Regime எனும் இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் சமர்ப்பிக்கலாம்.

இக்கணிப்பானில் ஒரே நேரத்தில் இரு முறைகளிலும் வரும் வரியை அறிந்து கொண்டு தங்களுக்குப் பயனுள்ள கணக்கீட்டு முறைக்கான Income Tax Form-ஐ A4 தாளில் இரண்டே பக்கங்களில் வருமாறு Print செய்து கொள்ளலாம்.

New Regime முறையில் எந்தவித கழிவுகளும் (80C - 80U) கழிக்க இயலாது. மொத்த ஊதியமும் நேரடியாக வருமான வரிக் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஆண்டு வருமானம் 13 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே இம்முறை பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்களுக்கு Old Regime முறையே நல்லது.

தனியார் நிறுவன ஊழியர்கள் / மற்ற மாநில & ஒன்றிய அரசு ஊழியர்கள் தங்களுக்கான 12 மாத Pay Drawn Particulars-ஐ Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாக அளித்து வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.
 
ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படைத் தகவல்களுடன் மார்ச் 2022 ஓய்வூதிய விபரங்களை அளித்தால் போதுமானது. மேற்கொண்டு Pay Drawn Particulars-ல் திருத்தம் தேவையெனில், Old Back / New Back Sheet-ல் தேவையான விபரங்களை நேரடியாகத் திருத்தி தங்களுக்கான வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களைப் பொறுத்தவரை 2022 மார்ச் மாத ஊதியம் & சில அடிப்படைத் தகவல்களை அளித்தால் போதும். தமிழ்நாடு அரசின் 8-வது ஊதிய மாற்றக்குழுவின் Pay Matrix படி 12 மாத Pay Drawn Particulars தானாகவே நிரப்பப்பட்டுவிடும். இதில் திருத்தம் தேவைப்படின் உரிய Sheet-ல் (Old Back / New Back) சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.

DA (31% & 34%), CPS (10%), வருமான வரிக்கான 4% Cess உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டுவிடும்.

CPS பிடித்தத்திற்கு Arrear செலுத்துதல், DA Arrear, Tax, பொங்கல் Bonus, Housing Loan உள்ளிட்டவற்றிற்கு மட்டும் அதற்குரிய மஞ்சள் கட்டங்களில் தனியே உள்ளிட வேண்டும்.

CPS / NPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் வரை விலக்குப் பெறும் வகையில், 80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தம் தானியங்கி முறையில் பிரித்துக் கொள்ளும்.

HRA exemption, வருட வீட்டு வாடகையாக ரூ.1,00,000/-ற்கும் மேல் கழித்தல் & மொத்த வருமான வரியையும் Rounded 10-ஆகக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றிற்கும் தனித்தனியே Options கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

மலைப்படி உள்ளிட்ட Compensatory Allowances / மாற்றுத்திறனாளிக்கான Conveyance Allowances உள்ளிட்டவற்றைக் கழிக்க விரும்புவோர் Others-ல் நிரப்பி அதன் மொத்தத்தை உரிய மஞ்சள் கட்டத்தில் தனியே காண்பித்து கழித்துக் கொள்ளலாம்.

NHIS / HF தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிவு காட்ட விரும்புவோர் அத்தொகையை அதற்குரிய மஞ்சள் கட்டத்தில் தனியே கொடுக்கவும்.

ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாத LIC, NSC உள்ளிட்ட சேமிப்புகளை அதன் மொத்தத் தொகையை காப்பீட்டு எண்ணுடன் அதற்குரிய கட்டத்தில் நிரப்பவும்.

இறுதியாக, நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு பழைய & புதிய கணக்கீட்டு முறைகளின் படியான வருமானவரி தனித்தனியே கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின் இறுதியில் தோன்றும்.

அதை ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையான Sheet-களை (Old Front & Old Back / New Front & New Back) மட்டும் Print செய்து கொள்ளலாம்.

இதில் கூடுதலாக, மாதிரி Form-16 படிவமும் தனியே தரப்பட்டுள்ளது. அசல் Form-16 படிவம் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலர் (Pay Drawing Officer) வாயிலாக IT துறையிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும்.

கீழேயுள்ள பொத்தானை அழுத்தினால் WinRAR file-ஆக Download ஆகும். அதனை Extract செய்தால்  Excel file கிடைக்கும்.

பெற்றதை ஞாலம் பயனுறப் பகிர்வோம்!
- செல்வ.ரஞ்சித் குமார்
 
வீட்டு வாடகைப்படி அட்டவணை (G.O.Ms.No.305, Dated 13th October 2017)