Income Tax Calculator 2025 (Proposal Version)


IFHRMSல் உள்ளிட தங்களுக்கு எந்த வரிவிதிப்பு முறை (OLD REGIME / NEW REGIME) பயனுள்ளதாக இருக்கும் என்பதை உறுதி செய்ய, 2024-25ஆம்  நிதியாண்டிற்கான தங்களது வருமான வரியைத் தோராயமாகக் கணக்கிட்டு சரியான வரிவிதிப்பு முறையை முன்கூட்டியே முடிவு செய்துகொள்ள இந்த “அறிவுச்சாளரம் Income Tax Calculator 2025 (Proposal Version)” பதிப்பு உதவியாக இருக்கும்.

இப்பதிப்பு அறிவுச்சாளரத்தின் கடந்த வெளியீடுகளைப் போன்றதே. இதில் மார்ச் 2024 மாதத்திற்கான ஊதிய விபரங்களை உள்ளிட வேண்டும்.

கூடுதலாக, இப்பதிப்பில் DA 46% என்பது வெளிப்படையாகத் தரப்பட்டுள்ளது. தோராயமாக ஏப்ரலில் 50%மும் ஜுலையில் 53%ஆகவும் அகவிலைப் படி மாற்றமடைய வாய்ப்புள்ளது. தேவைப்படின் அதைத் தாங்களே திருத்திக் கொள்ளலாம்.

வருமானவரித் தவணையை இப்பதிப்பில் உள்ளிடத் தேவையில்லை Old Back / New Back Sheetகளில் உள்ள Pay Drawn Detailsல் 12 மாதங்களுக்கான வருமான வரித் தவணை தானாகவே கணக்கிடப்பட்டு காட்டும்.

நினைவில் கொள்க. இது 100% மாற்றங்களுக்குரிய தோராயக் கணக்கீடு மட்டுமே. IFHRMSன் முழுமையான வருமான வரிக்கணக்கீடு பயன்பாட்டிற்கு வந்த பின்னர், தேவைப்படின் அதனடிப்படையில் புதிய பதிப்பு வெளியிடப்படும்.

திரையில் தோன்றும் கணக்கீட்டுத்தாளின் வலது கீழ் புறத்தில் உள்ள பொத்தானை அழுத்தி Excel file-ஆகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.