நாட்டின்
நிதி வருவாயில் 100% உறுதியான நேரடி வரி வருவாயைத் தமது மாத ஊதியத்தில்
1/12 பங்கென வழங்கி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் & தனியார்
நிறுவன ஊழியர்களுக்கு வணக்கம்.
ஆண்டுதோறும்
தாங்கள் சமர்ப்பிக்கும் Income Tax Form-ஐ எளிய முறையில் நீங்களே தயார்
செய்து, நிரப்பப்பட்ட படிவமாக Print எடுத்து பயன்படுத்திக் கொள்ள
M.S.Excel-ல் இந்த I.T Calculator வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டிலும் வருமான வரி கணக்கினை Old Regime, New Regime எனும் இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் சமர்ப்பிக்கலாம்.
இக்கணிப்பானில்
ஒரே நேரத்தில் இரு முறைகளிலும் வரும் வரியை அறிந்து கொண்டு தங்களுக்குப்
பயனுள்ள கணக்கீட்டு முறைக்கான Income Tax Form-ஐ A4 தாளில் இரண்டே
பக்கங்களில் வருமாறு Print செய்து கொள்ளலாம்.
New
Regime முறையில் எந்தவித கழிவுகளும் (80C - 80U) கழிக்க இயலாது. மொத்த
ஊதியமும் நேரடியாக வருமான வரிக் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
ஆண்டு வருமானம் 13 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே இம்முறை
பயனுள்ளதாக இருக்கும். மற்றவர்களுக்கு Old Regime முறையே நல்லது.
தனியார்
நிறுவன ஊழியர்கள் / மற்ற மாநில & ஒன்றிய அரசு ஊழியர்கள் தங்களுக்கான
12 மாத Pay Drawn Particulars-ஐ Old Back / New Back Sheet-ல் தேவையான
விபரங்களை நேரடியாக அளித்து வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.
ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படைத் தகவல்களுடன் மார்ச் 2022 ஓய்வூதிய விபரங்களை அளித்தால் போதுமானது. மேற்கொண்டு Pay Drawn Particulars-ல் திருத்தம் தேவையெனில், Old Back / New Back Sheet-ல் தேவையான
விபரங்களை நேரடியாகத் திருத்தி தங்களுக்கான வருமான வரியினை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டின்
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களைப் பொறுத்தவரை 2022 மார்ச் மாத ஊதியம்
& சில அடிப்படைத் தகவல்களை அளித்தால் போதும். தமிழ்நாடு அரசின் 8-வது
ஊதிய மாற்றக்குழுவின் Pay Matrix படி 12 மாத Pay Drawn Particulars தானாகவே
நிரப்பப்பட்டுவிடும். இதில் திருத்தம் தேவைப்படின் உரிய Sheet-ல் (Old
Back / New Back) சென்று திருத்தம் செய்து கொள்ளலாம்.
DA (31% & 34%), CPS (10%), வருமான வரிக்கான 4% Cess உள்ளிட்டவை தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டுவிடும்.
CPS
பிடித்தத்திற்கு Arrear செலுத்துதல், DA Arrear, Tax, பொங்கல் Bonus,
Housing Loan உள்ளிட்டவற்றிற்கு மட்டும் அதற்குரிய மஞ்சள் கட்டங்களில்
தனியே உள்ளிட வேண்டும்.
CPS
/ NPS பாதிப்பாளர்கள் 80C-ல் 2 இலட்சம் வரை விலக்குப் பெறும் வகையில்,
80CCD & 80CCD(1)-ல் CPS பிடித்தம் தானியங்கி முறையில் பிரித்துக்
கொள்ளும்.
HRA exemption,
வருட வீட்டு வாடகையாக ரூ.1,00,000/-ற்கும் மேல் கழித்தல் & மொத்த
வருமான வரியையும் Rounded 10-ஆகக் கணக்கிடுதல் உள்ளிட்டவற்றிற்கும்
தனித்தனியே Options கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றைத் தேர்வு செய்து
பயன்படுத்தலாம்.
மலைப்படி
உள்ளிட்ட Compensatory Allowances / மாற்றுத்திறனாளிக்கான Conveyance
Allowances உள்ளிட்டவற்றைக் கழிக்க விரும்புவோர் Others-ல் நிரப்பி அதன்
மொத்தத்தை உரிய மஞ்சள் கட்டத்தில் தனியே காண்பித்து கழித்துக் கொள்ளலாம்.
NHIS
/ HF தொகை 80D-ல் கழிக்கப்பட்டுவிடும். 80D-ல் கூடுதலாகக் கழிவு காட்ட
விரும்புவோர் அத்தொகையை அதற்குரிய மஞ்சள் கட்டத்தில் தனியே கொடுக்கவும்.
ஊதியத்தில்
பிடித்தம் செய்யப்படாத LIC, NSC உள்ளிட்ட சேமிப்புகளை அதன் மொத்தத் தொகையை
காப்பீட்டு எண்ணுடன் அதற்குரிய கட்டத்தில் நிரப்பவும்.
இறுதியாக,
நீங்கள் அளிக்கும் தரவுகளைக் கொண்டு பழைய & புதிய கணக்கீட்டு
முறைகளின் படியான வருமானவரி தனித்தனியே கணக்கிடப்பட்டு அதே பக்கத்தின்
இறுதியில் தோன்றும்.
அதை
ஒப்பிட்டு தங்களுக்குத் தேவையான Sheet-களை (Old Front & Old Back / New
Front & New Back) மட்டும் Print செய்து கொள்ளலாம்.
இதில்
கூடுதலாக, மாதிரி Form-16 படிவமும் தனியே தரப்பட்டுள்ளது. அசல் Form-16
படிவம் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலர் (Pay Drawing Officer) வாயிலாக IT
துறையிடமிருந்து மட்டுமே பெறப்பட வேண்டும்.
கீழேயுள்ள பொத்தானை அழுத்தினால் WinRAR file-ஆக Download ஆகும். அதனை Extract செய்தால் Excel file கிடைக்கும்.
பெற்றதை ஞாலம் பயனுறப் பகிர்வோம்!
- செல்வ.ரஞ்சித் குமார்
வீட்டு வாடகைப்படி அட்டவணை (G.O.Ms.No.305, Dated 13th October 2017)
Mm
ReplyDeletegreat, Unlock seamless cross-border management with expert NRI Taxation—tailored solutions for taxation, property, legal, and financial needs in India.
ReplyDeleteThis blog offers valuable insights for NRIs on US income tax return for NRI, including tax filing, exemptions, and DTAA benefits.
ReplyDelete